விலங்குகளுக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி தம்பதி பலி !


வரக்காப்பொல, ஹுனுவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வயல் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

ஹுனுவல, துல்ஹிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான கணவரும், 58 வயதான மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சட்டவிரோத மின்சார இணைப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.