களுவாஞ்சிக்குடியில் சமுர்த்தி ஆரோக்கிய உணவக கடை திறப்பு விழா


(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி ஆரோக்கிய உணவக கடை திறப்பு விழா நேற்று (26) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் களுவாஞ்சிகுடி பஸ் தரிப்பிட கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கங்களை ஊக்குவித்தல், சத்து நிறைந்த பயனுள்ள உணவுகளை வழங்குதல், உள்ளூர் அ அமைக்கப்படுகின்றன.

இதன்போது, பட்டிருப்பு சித்தி விநாயகர் பாலர் பாடசாலைக்கு ஒளியமைப்பு கருவி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு, விசேட அதிதியாக பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர், தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி ஜீவகுமார், முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், கிராம உத்தியோகத்தர்களின் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.கங்காதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.