கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன்போது, குறித்த வழக்கு தொடர்பான மேலதிக சாட்சி விசாரணைகளை பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி முதல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை மற்றும் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கியதன் மூலம் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் கூறி, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









.jpeg)



