திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் - விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி!



திருகோணமலை சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 6 பேர், திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் சுகயீனம் காரணமாக பரிசோதனை ஒன்றுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி கஜநாயக்க தெரிவித்துள்ளார்.