அநுராதபுரம் - மின்னேரியா பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் நேற்று திங்கட்கிழமை (12) மின்னேரியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மின்னேரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் காலி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


.webp)

.jpg)








.jpg)