
சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களைவலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) வெளிப்படுத்தினார்.
பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சர், பின்வரும் விவரங்களை தெரிவித்தார்:
ஒக்டேன் 92 பெட்ரோல் – ஏப்ரல் 23 வரை
ஒக்டேன் 95 பெட்ரோல் – மே 10 வரை
டீசல் – ஏப்ரல் 12 வரை
சூப்பர் டீசல் – மே 10 வரை
தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருட்களும், துறைமுகத்தில் உள்ள மூன்று கப்பல்களில் இருந்து கிடைக்கவுள்ள விநியோகங்களும் இந்த கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தேவையான நேரத்தில் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், புதிய வழங்குநர்களிடமிருந்தும் எரிபொருள் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
தடை இல்லாத எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய பல்வேறு வழங்குநர்களிடமிருந்து முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய போர்நிலையால் உருவான சூழ்நிலையிலும் தற்போதைய நிலையை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஜயகொடி வலியுறுத்தினார்.










.webp)

