இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாத நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
உலகெங்கிலும் எரிபொருள் போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, தடையின்றிப் பொருட்களை விநியோகிப்பதற்காக இதுவரை பொருட்களை இறக்குமதி செய்த நாடுகளுக்கு மேலதிகமாக, ஏனைய நாடுகளிலிருந்தும் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் விளக்கினார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போது நிலவும் போர்ச் சூழல் உலகின் ஏனைய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் மற்றும் ஏனையப் பொருட்களின் போக்குவரத்தில் இது தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.
தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 டொலரை எட்டியுள்ளது. எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சில குறைபாடுகள் காரணமாக விநியோக வலையமைப்பில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் பொருட்களை இறக்குமதி செய்யும் போது அவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. விநியோகத்தைத் தடையின்றிப் பேணுவதற்காகப் புதிய நாடுகளிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எனவே, பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என நாம் நம்புகிறோம். அதேநேரம், எமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


.jpg)









.jpeg)
.webp)