மட்டக்களப்பில் “Red Thread” திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம்




மட்டக்களப்பில் Rotaract Club of Batticaloa அமைப்பினால் “The Red Thread” என்ற சமூக சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக இரத்த தான முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்வு 2026 மார்ச் 14 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் ICBT Campus, மட்டக்களப்பு வளாகத்தில் நடைபெற்றது. சமூக நலனுக்காக பலர் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து நோயாளிகளின் உயிர் காக்கும் பணியில் பங்களித்தனர்.

இந்த திட்டம் Rotaractor David Shiyam Kirupainayagam, Rotaract Club of Batticaloa அமைப்பின் தலைவர் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வு Batticaloa Teaching Hospital – National Blood Transfusion Unit உடன் இணைந்து பாதுகாப்பான முறையில் இரத்த சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும் Brandix Batticaloa Pvt Ltd நிறுவனம் நிகழ்விற்கு ஆதரவாளராகவும், ICBT Campus Batticaloa நிகழ்விற்கான இடத்தை வழங்கியும் ஒத்துழைப்பு வழங்கின.

“Red Thread” என்பது தலசீமியா (Thalassaemia) நோயால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இரத்த தானத்தை ஊக்குவிக்கவும் தீவு முழுவதும் 18 ரோட்டராக்ட் கழகங்களால் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் சமூக சேவை திட்டமாகும்.

இந்த இரத்த தான முகாமை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து தன்னார்வலர்கள், இரத்த தானதாரர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுக்கு Rotaract Club of Batticaloa தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.