அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டும் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றிருந்த இவ்வலயம், இம்முறை தனது கல்வி மேன்மையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக, மாவட்ட மட்டத்தில் கலைப் பிரிவில் (Arts) 8ஆம் மற்றும் 10ஆம் இடங்களையும், வணிகப் பிரிவில் (Commerce) 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களையும் மாணவர்கள் பெற்று வலயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ஆசிரியர் வளம் மற்றும் ஏனைய பௌதீக வளப் பற்றாக்குறைகள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், அவற்றைப் பொருட்படுத்தாது மாணவர்கள் படைத்துள்ள இந்த உன்னத சாதனை அனைவரினதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இச்சிறப்பான முடிவுகளுக்காகக் கடினமாக உழைத்த மாணவர்களைப் பாராட்டுவதோடு, அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் மட்டக்களப்பு மேற்கு கல்விச் சமூகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.




.jpg)








