பண்டாரவளையில் சூதாட்ட விடுதி முற்றுகை : 10 பேர் கைது!


பண்டாரவளை வர்த்தகத் தொகுதி வளாகத்தில் இயங்கிவந்த சூதாட்ட விடுதி முற்றுகையிடப்பட்டதுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, இன்று சனிக்கிழமை (23) காலை நடத்தப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்