வனவாசல - ஹுனுபிட்டிய இடையே ரயில் தடம் புரண்டு விபத்து : 12 பயணிகள் காயம்!


வனவாசல மற்றும் ஹுனுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று சனிக்கிழமை (16) அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளான ரயிலின் பெட்டியொன்று தலைகீழாக கவிழ்ந்தில் காயமடைந்த 12 பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை 3:25க்கு பொல்கஹவெலவிலிருந்து களுத்துறை தெற்கை நோக்கிச் சென்ற ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.