.jpeg)
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி முதல் இன்று சனிக்கிழமை (16) வரையிலான காலப்பகுதியிலேயே இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து வரும் அனர்த்த நிலைமையால் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, வழமை போன்று அதிகளவிலான பகுதிச் சேதங்கள் களுத்துறை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன.
களுத்துறை: 78 வீடுகள்
மட்டக்களப்பு: 25 வீடுகள்
இரத்தினபுரி: 12 வீடுகள்
காலி: 06 வீடுகள்
கொழும்பு: 05 வீடுகள்
மொனராகலை: 04 வீடுகள்
யாழ்ப்பாணம்: 04 வீடுகள்
கம்பஹா: 03 வீடுகள்
அனுராதபுரம்: 02 வீடுகள்
அம்பாந்தோட்டை: 02 வீடுகள் மாவட்ட ரீதியாக பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்த மோசமான வானிலை காரணமாக இதுவரை 4,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் 48 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 1,263 குடும்பங்களைச் சேர்ந்த 4,099 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.










.jpeg)

