.jpeg)
களுத்துறை வடக்கு பகுதியில் சுமார் 600 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் களுத்துறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய கூட்டுச் சுற்றிவளைப்பின்போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் களுத்துறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.










.jpeg)

