ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது தற்கொலை செய்துக் கொள்வதற்கு ஒரு தரப்பினரால் தூண்டப்பட்டாரா என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது. கபில சந்திரசேனவுக்கு வழங்கப்பட்ட பிணை குறித்து எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தொடர்பில் கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முன்னர் நீதிமன்றத்துக்கு சத்தியகடதாசி ஊடாக பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவின் பெயரை குறிப்பெடுத்ததாக கபில சந்திரசேன நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதேபோல் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் இல்லை.இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸார் அரசியல் உத்தரவுகளுக்காக நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படுகிறார்கள்.
சாட்சியாளர்கள் படுகொலை செய்யப்படுவது, மர்மமான முறையில் உயிரிழப்பது தற்போது வழக்கமாகி விட்டது. இது காட்டுத்தன்மையான சட்டத்தின் நிர்வாகமாகும்.இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.











.jpeg)

