நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது!


 
நாட்டின் இரு வேறு பகுதிகளில், நேற்று வெள்ளிக்கிழமை (15) சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிசர பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் வெலிசர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட மதுபானத்துடன் மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருசபாடுவ வெல்ல பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடமிருந்து 70 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குருசபாடுவ வெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் சிலாபம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.