.jpeg)
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (15) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள கிணற்றில் சடலமொன்று காணப்படுவதாக ஹோமாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மொரொந்துடுவ, மஹாலந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான நீதவான் விசாரணைகளும் மரண பரிசோதனைகளும் நடத்தப்பட்டதையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹோமாகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.










.jpeg)

