7 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : பெண் உயிரிழப்பு ; 10 பேர் வைத்தியசாலையில்!
கேகாலை - மொலகொட மங்களகம பகுதியில் தனியார் பஸ் ஒன்று மேலும் சில வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (22) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
சுமார் 7 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஓட்டுநர் பயிற்சிப் பாடசாலை ஒன்றுக்கு சொந்தமான சில வாகனங்களே விபத்தில் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.




.jpg)








