தொல்பொருட்களைத் தேடி அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட 7 பேர் கைது!


 தொல்பொருட்களை தேடும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 சந்தேகநபர்கள் தப கள்ள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (18) வியாழக்கிழமை காலை தபகள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொல்லந்த பாதுகாக்கப்பட்ட பிரதேசத்தில் தப கள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அகழ்வாரய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 முதல் 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் தப கள்ள, மரதன் கடவல, கிரான்பாஸ், மாத்தறை மற்றும் மீகலேவ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

தபகள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.