திறந்த பல்கலைக்கழக குருநாகல் பிராந்திய நிலையத்தின் விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
திறந்த பல்கலைக்கழகத்தின் குருநாகல் கிளையில் நீண்டகாலமாக நிலவிவரும் இடவசதியின்மை, விரிவுரை மண்டபங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட ஏனைய குறைபாடுகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்,
திறந்த பல்கலைக்கழகத்தின் இடவசதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான காணி ஏற்கனவே கிடைத்துள்ளதால், அதன் அடுத்தகட்டப் பணிகளைத் திட்டமிட வேண்டும். நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொண்டு, திட்டத்தை விரைவாக ஆரம்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை நாம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். கல்விச் சீர்திருத்தங்கள் நிறுத்தப்படவில்லை. 2027 ஆம் ஆண்டில் 06 ஆம் தரம் மற்றும் 02 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாம் தரக் கல்விச் சீர்திருத்தத்திற்குத் தேவையான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைப் பாடப்புத்தகங்கள் அனைத்தையும் நாம் வெளியிட்டுள்ளோம். அடுத்த ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்சியையும் ஆரம்பிக்க இருக்கின்றோம்.
ஆசிரியர் வினைத்திறன்கான் தடைதாண்டல் பரீட்சைகள் தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர், அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டிற்குள் அந்தப் பிரச்சினைக்கும் தீர்வை வழங்கத் தயாராக உள்ளோம்.
அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குக் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய அமைச்சு தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. நீண்டகாலமாக நிலவி வந்த அதிபர்களின் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திஸாநாயக்க, குருணாகல் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், திறந்த பல்கலைக்கழகத்தின் குருநாகல் பிராந்திய நிலையத்தின் பணிப்பாளர் அனுஷ்க பண்டார உள்ளிட்ட விரிவுரையாளர்கள் மற்றும் பெருமளவு அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.













