
மொனராகலை, தம்பகல்ல பகுதியில் அமைந்துள்ள தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று இன்று (07) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை தீயணைப்புப் படையினர், தம்பகல்ல பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்தின் காரணமாகத் தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றும் தீக்கிரையாகிப் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இச்சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.










.jpg)

