பூநாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்று மற்றுமொரு லொறியுடன் மோதி, அதன் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஏ-9 வீதியின் கல்கந்தேகம பகுதியில் வவுனியா நோக்கி பயணித்த லொறியொன்று, வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு லொறியின் பின்புறமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் குறித்த லொறி, நிறுத்தப்பட்டிருந்த லொறியின் மீது தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (17) புதன்கிழமை காலை இந்தகோர விபத்து இடம்பெற்றுள்ளதாக பூநாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தின் போது நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 33 மற்றும் 46 வயதுடைய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பூநாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





.jpg)

.jpeg)




