யானைக்கால் நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்



மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஃபைலேரியாசிஸ் என்ற யானைக்கால் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒட்டுண்ணி குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அமைச்சகத்தின் யானைக்கால் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசன்னா சேரசிங்க வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, 'புருகியா மலாயி' (Brugia malayi) என்று பெயரிடப்பட்ட இந்த ஒட்டுண்ணி மூலம் கடந்த 5 மாதங்களில் 7 பேர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இதனை முறையாகக் கட்டுப்படுத்தாவிட்டால், இந்த ஒட்டுண்ணித் தொற்று நாடு முழுவதும் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.