
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்எலிய சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (18) மாலை பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிகம - பஸ்யால வீதியின் கல்எலிய சந்தியில் மிரிகம நோக்கி பயணித்த கன்டெய்னர் ரக வாகனம் ஒன்று, அதே திசையில் முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கல்எலிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மிரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக பாரவூர்தி வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.





.jpg)






.jpeg)