உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே! - உதய கம்மன்பில பகிரங்க குற்றச்சாட்டு


 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணியில் பிரபல நபர்கள் உள்ளார்கள்.

ஆகவே உண்மையை வெளிப்படுத்த, தான் பதவியில் இருக்கவேண்டும் என்று வத்திக்கானுக்கு கடிதம் எழுதி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நான்கு முறை சேவை நீட்டிப்பை பெற்றுக்கொண்டுள்ளார்.

குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே என்று தெரிவித்துள்ளார்.