.webp)
நாட்டில் பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் எனத் தங்களை பொய்யாக அடையாளப்படுத்திக் கொண்டு, பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நபர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் பரவி வரும் டெங்கு நோய் நிலையைப் பயன்படுத்தி, வீடுகளைப் பரிசோதனை செய்வதாகக் கூறி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட வீடுகளுக்குச் சென்று சில நபர்கள் ஏமாற்றிப் பணம் வசூலிப்பதாகப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களது உத்தியோகபூர்வ கடமைகளின் போது எந்தவொரு சூழ்நிலையிலும் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதோ அல்லது கட்டணம் அறவிடுவதோ கிடையாது என பொது சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களை சுகாதார பரிசோதகர் என்று கூறிக்கொண்டு யாராவது பணம் கேட்டால், அவர்களிடம் பணத்தைக் கொடுக்க வேண்டாம் எனப் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், இது போன்ற சந்தேகத்திற்குரிய நபர்கள் அல்லது பணக் கோரிக்கைகள் குறித்து ஏதேனும் தெரியவந்தால், அதுகுறித்து உடனடியாக பொலிஸாருக்கு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.



.jpg)








