
2009ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 64,663 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வியாழக்கிழமை (9) நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவ்வேளை அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 692 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம். எதிர்வரும் மாதப்பகுதிகளில் 243 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்






.jpg)


.jpg)



