வலஸ்முல்ல ‘தெம்பிலி லஹிரு’வின் வீட்டிற்கு இனந்தெரியாதோரால் தீவைப்பு!


பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘தெம்பிலி லஹிரு’ என்பவருடைய மித்தேனிய - ஜுலம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு நேற்று புதன்கிழமை (08) இரவு இனந்தெரியாத குழுவொன்று தீ வைத்துள்ளது.

இந்த தீவைப்புச் சம்பவம் இடம்பெற்ற வேளையில், வீட்டில் ‘தெம்பிலி லஹிரு’வின் தாய் மட்டுமே இருந்ததாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அதிஷ்டவசமாக இந்தத் தீ விபத்தினால் அவருக்கு எந்தவித ஆபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் மித்தேனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.