அரச சிறுவர் நாடகம் 2025/2026 ஆண்டிற்கான தேசிய மட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்களால் மேடையேற்றப்பட்ட நாடகத்திற்கு தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை ஆசிரியர் சிவகுரு நந்தகுமாரின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட இச் சாதனைக்கான பரிசளிப்பு விழா அலரிமாளிகையில் இடம்பெற்றது. அத்துடன் இந் நாடகம் பல சாதனைகளையும் படைத்துள்ளது.
ஆண்டின் சிறந்த மேடையமைப்பிற்கான முதலாம் இடத்தினை செல்வன் சுரேந்திரகுமார் பிரம்மிதன், ஆண்டின் சிறந்த ஆடையலங்காரத்திற்கான முதலாம் இடத்தினை திருமதி.பிரதீபா முகுந்தன், ஆண்டின் சிறந்த ஒப்பனைக்கான முதலாம் இடத்தினை செல்வன் வித்தகராஜ் அணுஜித், ஆண்டின் சிறந்த நடிகருக்கான முதலாம் இடத்தினை செல்வன் சந்திரகுமர் ஜதுபவன், ஆண்டின் சிறந்த பிரதியாக்கத்திற்கான முதலாம் இடத்தினை பிரதி அதிபர் சுகன்யா ரவீந்திரகுமார், ஆண்டின் சிறந்த இசையமைப்பிற்கான திறமைச் சான்றிதழ்களை செல்வன் யோகராசா டிசாந், செல்வன் றொயிஸ்டன் செலர் ஆகியோர் பெற்றுக் கொண்டதுடன்
இந் நாடகத்தில் பங்குகொண்ட 31 மாணவர்களுக்கும் வெற்றிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமையானது பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்திருந்தது.








.jpeg)





.jpg)

.jpg)



