இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு 2026 ஜூலை 8ஆம் தேதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) பிரிவு 2 இன் கீழ், அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கையொப்பமிட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம், பழைய போகம்பர சிறைச்சாலை இலங்கை முழுவதையும் உள்ளடக்கும் அதிகார வரம்புடன் உத்தியோகபூர்வ சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில், நிலவும் நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டியில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பர சிறைச்சாலை 138 ஆண்டுகள் செயல்பட்ட பின்னர், 2014ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த கைதிகள் பல்லேகலையில் அமைந்துள்ள தும்பற (Dumbara) சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.







.jpg)


.jpg)



