
சுற்றுலாத்துறையில் மனித வள மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், சுற்றுலாத்துறை அமைச்சும் சமுர்த்தி திணைக்களமும் இணைந்து ‘சத்காரிய ஸ்ரமசேனா’ என்ற புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு சுற்றுலாத்துறைக்குத் தேவையான தொழில்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறையில் திறமையான மனித வளத்தை உருவாக்குவதோடு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.






.jpg)


.jpg)



