இலங்கையில் 10 மாதங்களுக்குள் 5,200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் மற்றும் கொக்கெய்ன் கைப்பற்றல்



2025 ஒக்டோபர் 30 முதல் 2026 ஓகஸ்ட் 12 வரையான காலப்பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் 2,259 கிலோ 129 கிராம் ஹெரோயின், 2,653 கிலோ 245 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 293 கிலோ 755 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய போதைப்பொருட்கள் புத்தளம், வனாத்தவில்லுவ பகுதியில் அமைந்துள்ள ‘லட்டோ வத்த’ உயர் வெப்பநிலை எரியூட்டியில் அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.