இலங்கையில் மின்சார ரயில் சேவை: ரூ.80 பில்லியன் திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்


இலங்கையின் பொதுப்போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் வகையில் 80 பில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் மின்சார ரயில் சேவைத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதுகுறித்து ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவிக்கையில்,

நவீன புறநகர் போக்குவரத்துக்கான உட்கட்டமைப்பு திட்டமிடல்கள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும்

ஆரம்பக்கட்ட மேம்பாட்டுப் பணிகள் கொழும்பு (மருதானை) நிலையத்திலிருந்து ராகம பாணந்துறை மற்றும் மலவத்த ஆகிய முக்கிய புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான பாதைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஏனைய பிராந்திய விரிவாக்கங்களும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விரிவான உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 80 பில்லியன் ரூபா மதிப்பீட்டிலான வரவு செலவு திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக மின்சார ரயில்களுக்கான இந்த மாற்றம் தினசரி பயணிகளுக்கு ஒரு திறமான விரைவான மற்றும் சூழல் நட்பு போக்குவரத்து அமைப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றார்.