நேற்று புதன்கிழமை (19) கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய விசேட முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அப்பகுதியில் புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 8 சந்தேகநபர்களும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் முந்தல், உக்குவலை, தும்மலசூரிய, பிலியந்தலை, யாழ்ப்பாணம், மாதம்பை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32 முதல் 58 வயதிற்குட்பட்டவர்களாவர்.
மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


.jpg)



.jpg)





.jpg)
