.jpg)
ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துதல் மற்றும் வீதி விதிமீறல்களைப் பொதுமக்கள் காணொளியாகப் பதிவு செய்து, 070- 4755600 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு, அதனடிப்படையில் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தம்புள்ளை பகுதியில் அண்மையில் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு இடமாற்றப்பட்டுள்ளார். இவருக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு சில உத்தியோகத்தர்களின் தவறான செயற்பாடுகளால் ஒட்டுமொத்த பொலிஸ் திணைக்களத்திற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இலஞ்சம் பெறுவதும் வழங்குவதும் சட்டப்படி குற்றமாகும்.
தற்போது போக்குவரத்துத் தண்டப் பணத்தைச் செலுத்துவதற்கு 'கௌபே’ முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் தண்டப் பணத்தைச் சம்பவ இடத்திலேயே செலுத்துவதற்கான வசதிகளைச் செய்து தர வேண்டும். அதனை மறுத்து, பொலிஸ் நிலையத்துக்குஸ்ரீகு வருமாறு பொதுமக்களை இழுபறிக்குள்ளாக்குவது தவறான செயலாகும்.
மேலும், வீதிகளில் அதிக வேகத்துடனும் ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்துதல், வீதியை மறித்தல், தலைக்கவசம் இன்றி பயணித்தல் போன்ற போக்குவரத்து மீறல்களைப் பொதுமக்கள் காணொளியாகப் பதிவு செய்து 070-4755600 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்ப முடியும். இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் 1,400க்கும் மேற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக எவ்வித பாரபட்சமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



.jpg)







.jpg)
