வெல்லாவெளி விவேகானந்தம் எழுதிய 'மகாவலிக் கரையினிலே' நாவல் அறிமுக விழா பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை அரங்கில் பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்த்துறையினரால் எதிர்வரும் 04.09.2026 திகதி காலை 10.00 மணிக்கு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நூலின் அறிமுகத்தினை பேராதனை பல்கலைக் கழக மேனாள் தமிழத் துறைத் தலைவர், வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் நிகழ்த்தவுள்ளார். தொடர்ந்து பேராதனை பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீட, பீடாதிபதி பேராசிரியர் எஸ்.மகேஸ்வரன் முதற்பிரதி பெறுவதுடன் கருத்துரையினையும், பேராதனை பல்கலைக் கழக மேனாள் தமிழத் துறைத் தலைவர், சிரேஸ்ட பேராசிரியர் துரைமனோகரன் நூல் ஆய்வினையும், பேராதனைப் பல்கலைக்கழக பிரதம நூலகர் கலாநிதி இரா.மகேஸ்வரன் விசேட உரையினையும் நிகழ்த்தவுள்ளனர்.
நிகழ்வின் அடுத்து நூலாசிரியர் த.விவேகானந்தம் ஏற்புரையினையும் நன்றியுரையினையும் நிகழ்த்தவுள்ளார்.




.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)


