ஆபாசப் புகைப்படங்களை வெளியிடுவதாக யுவதிக்கு மிரட்டல் : பௌத்த துறவி கைது


யுவதி ஒருவரின் ஆபாசப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில், பௌத்த துறவி ஆடை அணிந்த நபர் ஒருவரை உடுகம பொலிஸார் கைது செய்துள்ளதாக காலி திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கனிஷ்ட பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் 33 வயதுடைய பௌத்த துறவி ஆவார்.

பாதிக்கப்பட்ட யுவதியுடன் காதல் தொடர்பில் இருந்த காலத்தில், இருவரும் தங்களது கைபேசிகள் வாயிலாக ஆபாச வீடியோக் காட்சிகளைப் பரிமாறிக்கொண்டுள்ளனர். எனினும், கடந்த மூன்று மாதங்களாக இவர்களது காதல் தொடர்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னிடம் உள்ள ஆபாசக் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகக் கூறி அவர் தன்னை மிரட்டுவதாக அந்த யுவதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.