கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஹொரனை தலைமையக பொலிஸ் அதிகாரிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை அடகு வைத்த குற்றத்திற்காகவே குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரனை பகுதியிலுள்ள கடை ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மற்றும் பதக்கத்தை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்தமை, இரண்டு நாட்களுக்குள் ஹொரனை, வெலிகல பகுதியில் இரு பெண்களின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலி மற்றும் பதக்கங்களை கொள்ளையடித்தமை, ஹொரனை, கோணப்பல பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலி மற்றும் பதக்கத்தைக் கொள்ளையடித்தமை மற்றும் ஹொரணை, முணகம பகுதியில் கடையில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒருவரின் தங்கச்சங்கிலியைக் கொள்ளையடித்தமை போன்ற கொள்ளைச் சம்பவங்களில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கைதான பிரதான சந்தேகநபர்கள் இருவரும் ஹொரனை மற்றும் அங்குருவாதொட பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 23 வயதுடையவர்களாவர்.
அதேபோன்று, கைது செய்யப்பட்ட 53 வயதுடைய இரு பெண்களும் ஹொரனை மற்றும் அங்குருவாதொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட இரு ஜோடி தங்க நகைகள், அடகுப் இரசீது ஒன்று மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட நால்வரிடமும் ஹொரனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




.jpg)
.jpg)






.jpg)
