இலஞ்சம் கோரியதாக வீடியோ வைரல்: தம்புள்ளை நெடுஞ்சாலைப் பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் இடைநீக்கம்


சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியொன்றில் இலஞ்சம் கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்ட தம்புள்ளை நெடுஞ்சாலைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் அவர் இலஞ்சம் பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டால் இலஞ்சச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

மேலும், வாகன சாரதிகள் போக்குவரத்துப் பொலிஸாரிடம் நேரடியாக பணம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும், GovPay செயலி ஊடாக அபராதங்களை செலுத்த முடியும் என்றும் அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளார்.