![]() |
கொள்ளை, திருட்டு மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பயணிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மேலும், வாடகை வாகனச் சாரதிகள் அல்லது சேவை வழங்குநர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் குறித்து அறிக்கைகள் கிடைத்துள்ளதை அடுத்து, இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
பயணிகள் தமது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், வாகனம் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதுடன், அதன் பதிவு இலக்கம், வாகனத்தின் மாதிரி மற்றும் சாரதியின் பெயர் ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் போது, தெரியாத அல்லது ஆள்நடமாட்டமற்ற வழிகளில் சாரதி வாகனத்தை இயக்க முற்பட்டால் பயணிகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.
மேலும், தாம் சேருமிடத்தைச் சென்றடையும் வரை, மொபைல் போன் அல்லது பிரத்யேக செயலிகள் மூலம் தமது நேரடி இருப்பிடத்தைக் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரிய ஒருவருடன் பகிர்ந்துகொள்வது அவசியமாகும்.
அத்துடன், பயணத்தின் போது தெரியாத நபர்கள் வழங்கும் உணவு, பானங்கள் அல்லது தண்ணீரைக் உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணத்தின் போது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்களோ அல்லது அச்சுறுத்தல்களோ ஏற்படும் பட்சத்தில், உடனடியாக 119 பொலிஸ் அவசர உதவிச் சேவைக்கோ அல்லது 118 அவசரத் தகவளிக்கும் சேவைக்கோ தொடர்புகொண்டு வாகனம் மற்றும் சம்பவம் குறித்த விபரங்களை வழங்குமாறு பொலிஸார் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.






.jpg)





.jpg)
