கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நீதியமைச்சரிடம் பாராளுமன்றத்தில் வைத்து வினவிய போது 'அவ்வாறான கடிதம் பற்றி தனக்கு தெரியாது' என்று பதிலளித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.இதன்போது அமைச்சரவை பேச்சாளர்; நளிந்த ஜயதிஸ்ஸ 'மகாநாயக்க தேரர்கள் அனுப்பி வைத்த கடிதத்தை பரிசீலனை செய்து,அதன் பின்னர் தானும், நீதியமைச்சரும் கடந்த 3 ஆம் திகதி மகாநாயக்க தேரர்களை சந்திக்க நேரில் சென்றோம்'என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் முழுமையாக அறிந்திருந்தும் நீதியமைச்சரும், அமைச்சரவை பேச்சாளரும் பொய்யுரைத்துள்ளார்கள். மாலிமாவ என்றால் பொய், பொய் என்றால் மாலிமாவ என்பது தினசரி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் அரசியலமைப்புத் திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட வேண்டும். சகல தரப்புடனும் கலந்துரையாடி நீதிமன்ற கட்டமைப்பில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றே மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிப்பதாக மகாநாயக்க தேரர்கள் குறிப்பிடவில்லை.
பொய்யை மாத்திரம் முன்னிலைப்படுத்திச் செயற்படும் தேசிய மக்கள் சக்தி தற்போது புத்தசாசனத்திலும் பொய்யை உள்வாங்கியுள்ளது.இது பௌத்த மதத்தை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும்.தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு இவ்வாறு செயற்படுவது முறையற்றது என்றார்.




.jpg)






.jpg)

.jpg)