மதுரு ஓயா தேசிய பூங்காவை அண்மித்த தியபெதும பகுதியில் யானைத் தந்தத் துண்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஹெனானிகல வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் ஓகஸ்ட் 19ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபரிடமிருந்து பல யானைத் தந்தத் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட யானைத் தந்தத் துண்டுகளும் இன்று (20) தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.
குறித்த யானைத் தந்தத் துண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டன, அவை எந்த நோக்கத்திற்காக வைத்திருக்கப்பட்டன என்பது தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






.jpg)





.jpg)
