.jpg)
சிறந்த திட்டமிடலுடன் அரச நிர்வாகத்தை முன்கொண்டுச் செல்கிறோம். வெளியக தாக்கங்களினால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ஊழல்வாதிகள் இன்று கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளார்கள்.
ஊழல் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் ஊழல்வாதிகள் அச்சமடைந்துள்ளார்கள். அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர தேசிய பிரச்சினையல்ல என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள், எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். சகல வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் சற்று தாமதம் காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்து வீழ்ச்சியடைந்த அரச கட்டமைப்புடனான அரசாங்கத்தையே ஜனாதிபதி பொறுப்பேற்றார். போதைப்பொருள் வர்த்தகத்துக்கும், பாதாளக் குழுக்களுக்கும் கடந்த காலங்களில் அரச அனுசரணை வழங்கப்பட்டிருந்தது.
செல்வந்தர்களும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் கடந்த காலங்கங்களில் தவறு செய்வதற்கு அச்சமடையவில்லை. அரச ஆதரவுடன் பல ஊழல் மோசடிகளில் பலர் ஈடுபட்டார்கள். அந்த நிலைமை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகவே காணப்படுகிறது. பிரபுக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த விசேட வரபிரசாதங்கள் அனைத்தும் நீக்கப்பட்டது. இன்று எவருக்கும் விசேட சிறப்புரிமைகளோ, வரபிரதாசங்களோ கிடையாது.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ஊழல்வாதிகள் இன்று கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளார்கள். ஊழல் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் ஊழல்வாதிகள் அச்சமடைந்துள்ளார்கள். அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர தேசிய பிரச்சினையல்ல.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில் செயற்படுத்துவோம். அரச நிர்வாக கட்டமைப்பில் ஒருசில தரப்பில் குறைப்பாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. கடந்தகால மோசடியான நிர்வாக கட்டமைப்புக்கு பழக்கப்பட்டவர்கள் இன்றும் உள்ளார்கள்.அவ்வாறானவர்கள் குறித்து நிர்வாக கட்டமைப்பின் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.



.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)


