பொலிஸ் மா அதிபர் தொடர்பான கருத்து; சாகர காரியவசத்திற்கு CCIB அழைப்பு


பொலிஸ் மா அதிபர் தொடர்பில் வெளியிட்ட கருத்தொன்று குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று திங்கட்கிழமை (10) காலை 10.30 மணிக்கு CCIB முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கருதப்படும் வகையில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை அடுத்தே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தான் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தீவிரமானது எனக் கருதும் அதிகாரிகள், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.