
நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்துவதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தேவையான கையடக்க சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதால், அபராதம் விதிக்கப்படும் வாகன சாரதிகள் பொலிஸ் நிலையத்திற்குச் செல்லாமல் சம்பவ இடத்திலேயே GovPay மூலம் அபராதத்தை செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
GovPay வசதி இல்லை எனக் கூறி சாரதிகளை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்புவது சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியின் பாரதூரமான தவறாகக் கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் போக்குவரத்துக் குற்றங்களுக்கான புள்ளிகள் குறைக்கும் (Demerit Point) முறையை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



.jpg)







.jpg)
