யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் - NPP உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் கைது


நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து சந்தேகநபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதன்போது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராக்களும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சந்தேகநபர் விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.