கதிர்காமம்–புத்தல வீதியில் பேருந்தைத் தாக்கிய காட்டு யானை : 10 பேர் காயம்


கதிர்காமம் - புத்தல வீதியில் தனியார் பேருந்து ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
இன்று காலை கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிர்காமம் - புத்தல வீதியின் மின்சார வேலி காவல் அரணுக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்