.jpg)
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டியனாறு குளம் பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (22) சுற்றிவளைத்துள்ளனர்.
பொலிஸ் மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் குறித்த இடத்தை சுற்றிவளைத்தபோது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, கசிப்பு உற்பத்திக்காக 10 பேரல்களில் வைக்கப்பட்டிருந்த கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கிருந்த வெற்று பேரல்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)


.jpg)
.jpg)

.jpg)

