12ஆம் திகதி அநுராதபுரத்தில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என்பதை அரசாங்கம் உணர்ந்தால் அதற்கு முன்னரே என்னைச் சிறையில் அடைக்கலாம் – நாமல் எம்.பி.



எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் பெருமளவான மக்கள் ஒன்றுகூடுவார்கள் என்பதை அரசாங்கம் உணர்ந்தால், அதற்கு முன்னதாகவே தன்னைச் சிறையில் அடைக்கக்கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்,

“12ஆம் திகதி அநுராதபுரத்திற்கு பெருமளவான மக்கள் வருவார்கள் என்பதை அரசாங்கம் உணர்ந்தால், அதற்கு முன்னதாகவே நாமல் ராஜபக்ஷவைச் சிறையில் அடைக்கவும் வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்து வரும் பேரணிகளால் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சிக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் செப்டம்பர் 5 முதல் நாடளாவிய பேரணிகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அக்கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது.

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி, தனது பலவீனங்களை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.