அத்துடன், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடமிருந்தும் இச் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு முதன்மை நீதவான் அசங்க எஸ். போதரகம, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க் சதுக்க நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக, நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் கொடுத்த குற்றச்சாட்டின் பேரிலேயே ஜானகி சிறிவர்தன கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த 70 மில்லியன் ரூபா தொகையை அவர் மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களைப் பரிசீலித்த பின்னரே நீதவான் இந் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.





.jpg)
.jpg)




.jpg)

.jpg)