யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து கை விலங்குடன் தப்பிச்சென்ற கைதி கைது


யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பாலியல் குற்றத்துடன் தொடர்புடைய கைதி ஒருவர் உடல் சுகயீனமடைந்த நிலையில், சிறை காவலர்களின் கண்காணிப்பின் கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) 03.00 மணி அளவில் வைத்தியசாலையில் இருந்து கை விலங்குடன் தப்பிச் சென்றுள்ளார்.

இவ்வாறு தப்பிச் சென்றவர் இளவாலை பகுதியில் ஒழிந்திருப்பதாக இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை (01) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.